செய்திகள்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க முடியாது- 30ம் தேதி வரை தடை விதித்தது அரசு

Published On 2020-11-06 06:43 GMT   |   Update On 2020-11-06 06:43 GMT
நாளை முதல் நவம்வர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வருவதால் ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் 

இதுபற்றி அமைச்சர் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான 7231 படுக்கைகள் நிரம்பி உள்ளன. இன்னும் 8572 படுக்கைகள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை மேலும் அதிரிக்க உள்ளோம். மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.
Tags:    

Similar News