செய்திகள்
ஜிகா வைரஸ்

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Published On 2021-07-19 21:11 GMT   |   Update On 2021-07-19 21:11 GMT
திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் குறைந்த நிலையில் கேரளாவில் இன்னும் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
 
இதற்கிடையே, கேரள மாநிலத்தில் தற்போது ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. அதனால் மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. 
திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஜிகா வைரஸ் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இதில் மேலும் பலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி தொற்று நோய் பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 37 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News