லைஃப்ஸ்டைல்
தென்னிந்திய ஆண்களுக்கேற்ற வட இந்திய ஷெர்வானிகள்

தென்னிந்திய ஆண்களுக்கேற்ற வட இந்திய ஷெர்வானிகள்

Published On 2021-04-26 06:16 GMT   |   Update On 2021-04-26 06:26 GMT
ஆண்கள் கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.
வட இந்தியாவில் திருமணத்தன்று அணியும் ஷெர்வானிகளை தென்னிந்திய ஆண்கள் தங்களது வரவேற்பு நிகழ்ச்சியன்று அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.

ஆச்ச்கன் ஷெர்வானி

பேஷன் உலகில் மிகச்சிறந்த பாணியாகத் திகழ்கின்ற ஆடைகளில் இவ்வகை ஷெர்வானியும் ஒன்று எனலாம். அதனால்தான், இவ்வளவு பிரபலமான ஆச்ச்கன் ஷெர்வானிகளை தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின்போது அணிந்து கொள்ள ஆண்கள் விரும்புகிறார்கள். சுரிதார் ஃபேண்ட்கள், டோத்தி இவற்றுடன் ஷெர்வானியின் மேல் ஜாக்கெட்டும் அணிந்தால் அது மிகவும் அற்புதமான தோற்றத்தைத் தரும் பாணியாக இருக்கும்.

சிப்கன் ஸ்டைல் ஷெர்வானி

சமகால சகாப்தத்தில், ஒருவித ராஜ தோற்றத்தைப் பிரதிபலிக்கும் பாணியில் அமைந்த ஷெர்வானி இவை. முகலாய அரச மற்றும் ஆட்சியாளர்கள் அணிந்திருந்த ஆடையின் பிரதிபலிப்பு இவ்வகை ஷெர்வானி என்றும் சொல்லலாம். பெரிய மணிமாலைகள், ஹாரங்களுடன் டர்பனும் (தலைப்பாகை) அணிந்து கொண்டால் ராஜகளை என்பது அடுத்தவர் சொல்லாமலேயே வந்துவிடும்.

அங்ரகா ஷெர்வானி

உடலைப் பாதுகாப்பது என்ற பொருள்படும் இவ்வகை ஷெர்வானிகள். கட்டுமஸ்தான உடலமைப்பைப் பெற்றுள்ள ஆண்கள் தங்களது தோற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்பும்போது அவர்கள் தேர்ந்தெடுப்பது இவ்வகை அங்ரகா ஷெர்வானிகள் என்றே சொல்லலாம். கழுத்து, காலர் மற்றும் கை போன்ற இடங்களில் மணிகள் மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறந்த வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இவ்வகை ஷெர்வானிகளை அணியும்பொழுது வேறு எந்த நகைகளையும் அணிய வேண்டிய அவசியம் இல்லை.

நவீன பிரிண்ட் ஷெர்வானி

பல்வேறு வடிவங்கள் மற்றும் கலைப்படைப்புகளுடன் சமகால வடிவமைப்புகளின் சரியான கலவை இவ்வகை அச்சிடப்பட்ட ஷெர்வானிகளாகும். உடுத்தும் ஆடையில் செழிப்பான தோற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் இவ்வகை ஷெர்வானிகளை நிச்சயம் விரும்புவார்கள். அச்சிடப்படும் உருவத்தின் சரியான தோற்றத்தை வெளிப்படுத்த மிகவும் தரமான பொருட்களைப் பயன்படுத்துவது இவ்வகை ஷெர்வானிகளின் மற்றொரு சிறப்பம்சம் எனலாம்.

பாகிஸ்தானி ஷெர்வானி

இந்தியத் திருமணங்களில் ஒரு தனித்துவமான இடத்தை இவ்வகை ஷெர்வானிகள் பிடித்துள்ளன. அழகு, கச்சு வேலை மற்றும் கண்களைக் கவரும் நிறம் இவற்றிற்காகவே இவ்வகை ஷெர்வானிகள் மணமகன் மட்டுமல்லாமல் பிற ஆண்களும் பல்வேறு விழாக்களுக்கும் அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள்.

ஜோத்பூரி ஷெர்வானி

இன்றளவும் இந்திய அரச குடும்பத் திருமணங்களில் இவ்வகை ஷெர்வானிகள் கட்டாயம் அணியப்படுகின்றன. இவ்வகை ஷெர்வானிகளை வடிவமைப்பவர்கள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகவே இருக்க முடியும். இவ்வகை ஷெர்வானிகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் மிகக் குறைந்த அளவிலேயே இவை தயாரிக்கப்படுகின்றன.

ஜாக்கெட் பாணி ஷெர்வானி

டஸ்ஸர், பட்டு மற்றும் பனாரஸ் துணிகளில் பழங்காலத் தோற்றத்தைத் தரும் வகையில் தங்கப்பூச்சு மற்றும் ஜிகினா வேலைப்பாடுகளுடன் ஒரு இளவரசர் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை இவ்வகை ஷெர்வானிகள்.

அனார்கலி ஷெர்வானி

இந்தியாவின் கடுஞ் சிக்கலான வேலைப்பாட்டிற்கு மிகச்சிறந்ததாக அமைந்த மற்றொரு உதாரணம் இவ்வகை ஷெர்வானிகள். சுல்தான் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஷெர்வானிகள் இவை.

இந்தோ-வெஸ்டர்ன் ஷெர்வானி

இந்திய-மேற்று பாணியின் கலவையாக நவீனத்துவத்தின் தொடுதலுடன் சமநிலையில் இருக்கும் இளைஞர்களின் விருப்பத்தைத் தோற்றுவிக்கும் புதுவிதமான ஷெர்வானி இவை எனலாம்.

ஷெர்வானி இல்லாமல் திருமண நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் முழுமையடையாது என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.
Tags:    

Similar News