ஆன்மிகம்
3 ஆயிரம் கிலோ புளியோதரை பிரசாதத்தையும், விழாவில் பங்கேற்ற பொதுமக்களையும் படத்தில் காணலாம்.

கள்ளியடி குருநாதரின் குருபூஜை: 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை

Published On 2021-02-06 01:55 GMT   |   Update On 2021-02-06 01:55 GMT
கள்ளியடி குருநாதரின் 80-வது குருபூஜை விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடமதுரை அருகே புதுப்பட்டியில் கள்ளியடி குருநாதரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு கள்ளியடி குருநாதரின் 80-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து புதுப்பட்டியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கள்ளியடி குருநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

மாலை 5 மணிக்கு 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து இரவில் கள்ளியடி குருநாதரின் உருவச்சிலை மின் அலங்காரத்தால் ஆன சப்பரத்தில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
Tags:    

Similar News