உள்ளூர் செய்திகள்
சுற்றுலா வாகனங்கள் சோதனை.

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சோதனை

Published On 2022-05-07 10:00 GMT   |   Update On 2022-05-07 10:00 GMT
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கவும் ராமேசுவரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு வருகைதரும் பக்தர்களும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  மற்றும் ராமேசுவரம் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் 1964-ல் அழிந்த தனுஷ்கோடி பகுதியை பார்வையிடுவதற்கு தினசரி 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியில் செல்லும்போது மதிய உணவு, குளிர்பானம் ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளில்  கொண்டு செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. 

மேலும் பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் காற்றில் பறந்து கடலில் விழுகிறது. இதனால் கடலில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.  அதுபோல காடுகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி சுற்றுச்சூழலையும், நீர்த்தேக்க பாதையையும் பாதிக்கிறது. 

 இவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ராமேசு வரம்-தனுஷ்கோடி செல்லும் சாலையில் ஜடாயு தீர்த்தம் பகுதியில் கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட வனச்சரக அதிகாரி செந்தில்குமார் கண்காணிப்பில் தனுஷ்கோடிக்கு செல்லும் சாலையில் சோதனை சாவடி அமைத்து அந்தப்பகுதியில் வரும் வாகனங்களை நிறுத்தி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக மாற்று மஞ்சள் பைகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்தநிகழ்ச்சியில் வனவர் தேவகுமார், வனச்சரக அலுவலர்கள் ஜான்சன், சிவகுமார், கருப்பையா, பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News