இந்தியா
உலகின் மிகப் பெரிய தேசிய கொடி

போர்களத்தில் காட்சிபடுத்தப்படும் உலகின் மிகப் பெரிய தேசிய கொடி

Published On 2022-01-14 19:09 GMT   |   Update On 2022-01-14 19:09 GMT
இராணுவ தினத்தை கொண்டாடும் வகையில் காதி துணியால் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய தேசிய கொடி காட்சி படுத்தப்படுவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய இராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட மிக பிரம்மாண்ட தேசிய கொடி தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. முற்றிலும் காதி துணியால் நெய்யப்பட்ட தேசியகொடி சுமார் 1400 கிலோ எடை கொண்டது.  

1971 ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போரின் மைய பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள லோங்கேவாலா பகுதியில் இந்த பிரமாண்ட தேசிய கொடி இன்று காட்சிபடுத்தப்படுகிறது. 

இதுவரை நான்குமுறை இதேபோன்ற பிரம்மாண்ட தேசிய கொடி இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இன்று இராணுவ தினத்தையொட்டி 5 வது முறையாக இன்று பிரம்மாண்ட தேசிய கொடி பொதுமக்கள் பார்வைக்கு காட்சி படுத்தப்படுவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News