ஆன்மிகம்
பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை(பழைய படம்)

பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை விழாவை வழக்கம் போல் மகாதானபுரத்திலேயே நடத்த தீர்மானம்

Published On 2020-10-06 05:28 GMT   |   Update On 2020-10-06 05:28 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவை வழக்கம்போல் மகாதானபுரத்திலேயே நடத்த வேண்டும் என்று பக்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் பக்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் எஸ்.பி.அசோகன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் குருசாமி இறை வணக்கம் பாடினார்.

துணைத் தலைவர் எம்.வி.நாதன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவை இந்த ஆண்டும் வழக்கம் போல் மிக சிறப்பாக நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறையை கேட்டுக் கொள்வது, பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்திலேயே ஐதீகமுறைப்படி நடத்த வேண்டும் என்று திருக்கோவில் நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது,

மேலும், போலீஸ் அணிவகுப்பு மரியாதையை இந்த ஆண்டும் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் போது வழக்கம் போல் நடத்த வேண்டும் என்று காவல்துறையை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பகவதி அம்மன் பக்தர்கள் சங்க நிர்வாகிகள் பொன்னையா, திரவியம், ராஜன், ரெகுகிருஷ்ணன், சுபாஷ்விஜயன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News