செய்திகள்
விபத்து பலி

சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்- பெண் ஊழியர் பலி

Published On 2020-05-29 09:32 GMT   |   Update On 2020-05-29 09:32 GMT
சாலையோரம் நின்ற வேன் மீது மினி பஸ் மோதியதில் தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் தொழிற்சாலை மீண்டும் இயங்க தொடங்கியது. நிர்வாகத்தின் சார்பில் மினி பஸ் மூலம் ஊழியர்களை அழைத்து வந்தனர்.

நேற்று வழக்கம் போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து மினி பஸ் மூலம் 21 ஊழியர்களை ஏற்றி கொண்டு வந்தனர். மினி பஸ்சை வினோத் ஓட்டி வந்தார். பஸ் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாந்தவேலுர் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் பகுதியை சேர்ந்த அரசு (வயது 34), அதே பகுதியை சேர்ந்த ருக்கு (34), காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்வர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பெண் ஊழியர் அரசு, பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்தருக்கு, பாலாஜி இருவரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News