தொழில்நுட்பம்
அசுஸ் சென்போன்

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன அசுஸ் சென்போன் 8 சீரிஸ் விவரங்கள்

Published On 2021-04-24 04:06 GMT   |   Update On 2021-04-24 04:06 GMT
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக சென்போன் 8 மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.



கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ASUS_1004D எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. மேலும் இரு மாடல்களும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News