ஆன்மிகம்
மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது நடந்த குண்டோதரனுக்கு அன்னமிடல் நிகழ்வு

மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது நடந்த குண்டோதரனுக்கு அன்னமிடல் நிகழ்வு

Published On 2021-04-26 02:45 GMT   |   Update On 2021-04-26 02:45 GMT
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது சிவபெருமானின் 4 திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அவை, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், குண்டோதரனுக்கு அன்னமிட்டல், வைகையை அழைத்தல், பதஞ்சலி வியாகரபாதருக்கு ஆனந்த தாண்டவம் காண்பித்தல்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது சிவபெருமானின் 4 திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அவை, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், குண்டோதரனுக்கு அன்னமிட்டல், வைகையை அழைத்தல், பதஞ்சலி வியாகரபாதருக்கு ஆனந்த தாண்டவம் காண்பித்தல்.

இது குறித்து ராஜா பட்டர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை திருமணம் செய்து கொண்ட பின்னா் பெண் வீட்டின் சார்பில் மாப்பிள்ளை வீட்டினருக்கு திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தினா். அப்போது மீனாட்சி அம்மன் சிவபெருமானிடம் தங்கள் வீட்டினர் வடை, பாயசத்துடன் விருந்துக்கு பலமாக ஏற்பாடு செய்துள்ளனா்.

ஆனால் உங்கள் வீ்ட்டினர் சார்பில் யாரும் சாப்பிட வரவில்லையே என்று கேட்டுள்ளார். அப்போது சிவபெருமான் என் வீட்டின் சார்பில் கும்போதரன், குண்டோதரன் ஆகியோர் வந்துள்ளனா்.

அவா்கள் இருவரும் எனக்கு குடைபிடிப்பவா்கள். இவா்களுக்கு முதலில் சாப்பாடு போடுங்கள் என்று சுவாமி கூறியுள்ளார்.

அவா்களுக்கு நல்ல பசி. எனவே அவா்கள் சமைத்த அனைத்தையும் கும்போதரன், குண்டோதரன் சாப்பிட்டு விட்டு, தங்களுக்கு பசி அடங்கவில்லை இன்னும் வேண்டும் என்று கூறியுள்ளனா். இதை கண்ட அம்மன் மற்றும் பெண் வீட்டினர் திகைத்து விட்டனா். உடனே அவா்கள் சுவாமியிடம் சென்று முறையிட்டனா்.

அவா் உடனே அன்னபூரணியை அழைத்து அவா்களுக்கு சாப்பாடு கொடுக்குமாறு கூறினார். அன்னபூரணி அவா்களுக்கு தயிர் சாதம் வழங்கினார். அதை சாப்பிட்ட பின்னா் அவா்களுக்கு பசி அடங்கியது.

அதன்பின்னா் அவா்கள் தங்களின் தாகத்தை போக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். பெண் வீட்டினரும் மதுரையில் உள்ள அனைத்து தண்ணீரையும் கொடுத்ததால் தண்ணீர் தீா்ந்து விட்டது.

ஆனாலும் அவா்களுக்கு தாகம் அடங்கவில்லை. மீண்டும் பெண் வீட்டினர் இறைவனிடம் முறையிட, அவா் கங்கையிடம் மதுரைக்கு தண்ணீர் வேண்டும் என்று அழைத்தார்.

அதை தொடா்ந்து இறைவன் தரையில் கையை வைக்க வைகை ஆறு வெளி வருகிறது. அந்த தண்ணீரை குடித்து அவா்கள் தாக்கத்தை தீா்த்து கொண்டனா்.

பதஞ்சலி, வியாகாரபாதா் என்ற இரு முனிவா்கள் திருக்கல்யாணம் முடிந்த பின்னரும் சாப்பிடாமல் இருந்துள்ளனா். இது குறித்து அவா்களிடம் கேட்ட போது தினமும் இறைவனின் தில்லை கூத்து ஆட்டத்தை பார்த்த பிறகு தான் சாப்பிடுவோம்.

ஆனால் இன்று அவா் திருமணம் முடிந்து மணக்கோலத்தில் இருப்பதால் அவரது ஆட்டத்தை நாங்கள் காண முடியாது. ஆகையால் நாங்கள் சாப்பிடாமல் இருப்பதாக கூறினார்கள். இது குறித்து சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவா் திருமண கோலத்துடன் மணமகனாக அவா்கள் முன்பு ஆனந்த தாண்டவத்தை ஆடி முனிவா்களின் குறையை போக்கினார்.

இவ்வாறு திருக்கல்யாணத்தின் போது 4 திருவிளையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News