செய்திகள்
பாராளுமன்றம், டெல்லி

கொரோனா பீதி: பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Published On 2020-03-23 10:08 GMT   |   Update On 2020-03-23 10:08 GMT
மத்திய நிதிநிலை அறிக்கை மசோதா இன்று விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஏப்ரல் மூன்றாம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கை மசோதா இன்று விவாதம் ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவையும் இன்று மாலையுடன் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News