ஆன்மிகம்
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ள காட்சி

மயிலாடுதுறை தாலுகாவில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் மூடப்பட்டன

Published On 2021-04-26 06:12 GMT   |   Update On 2021-04-26 06:12 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டு, தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத வழிபாட்டு தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முழு ஊரடங்கு நாளில் இருந்து அமல்படுத்திட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள கோவில்கள் நேற்று முதல் மூடப்பட்டன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நேற்று அதிகாலை முதல் நடை சாத்தப்பட்டு, தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதேபோல் சீர்காழி சட்டைநாதர் கோவில், நாங்கூர் பகுதியில் அமைந்துள்ள வைணவ திவ்யதேச கோவில்கள், திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில், மங்கைமடம் யோகநாதர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில், திருப்புங்கூர் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று முதல் மூடப்பட்டன.
Tags:    

Similar News