செய்திகள்
அந்த்ரே ரஸல்

அந்த்ரே ரஸல் 14 பந்தில் அரைசதம்: ஜமைக்கா அணி சாதனை

Published On 2021-08-28 16:17 GMT   |   Update On 2021-08-28 16:17 GMT
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் அந்த்ரே ரஸல் 6 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் அரைசதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஜமைக்கா அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. அந்த்ரே ரஸல் 6 சிக்சர், 3 பவுண்டரியுடன் 14 பந்தில் அரைசதம் விளாசினார். தொடக்க வீரர் சாத்விக் வால்டன் 47 ரன்னும், கென்னர் லீவிஸ் 48 ரன்னும், ஹைதர் அலி 45 ரன்களும் விளாசினர்.

பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா கிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டிம் டேவிட் 28 பந்தில் 56 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.3 ஓவரில் 135 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 120 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்வளவு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இதுவரை எந்த அணியும் வென்றதில்லை. இதன்மூலம் கரீபியன் பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை ஜமைக்கா அணி பெற்றுள்ளது.
Tags:    

Similar News