உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

முழுஊரடங்கு நாளில் மது விற்ற 6 பேர் கைது

Published On 2022-01-24 10:38 GMT   |   Update On 2022-01-24 10:38 GMT
முழுஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர பகுதியில் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. 

இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதை கண்காணிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நயினார்குளம் அருகே ஒருவர் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றுக்கொண்டு இருந்தார். விசாரணையில் அவர் சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 75) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

இதேபோல் மாநகர் பகுதி முழுவதும் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற மேலும் 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 176 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News