செய்திகள்
திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

கங்கை புத்துயிரூட்டல் திட்டம் - உத்தரகாண்டில் 6 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2020-09-29 07:04 GMT   |   Update On 2020-09-29 10:52 GMT
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், ஆறு பெரிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். 

கங்கையை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி, பல்லுயிர்ப் பெருக்கம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் முதல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


நாள் ஒன்றிற்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்வார்-ஜெக்தீப்பூரில் நாள் ஒன்றிற்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துவது, சரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்திற்கான கட்டுமானம் பணி உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News