செய்திகள்
கொரோனா வைரஸ்

அதிரும் பிரேசில் - 6 லட்சத்தைத் தாண்டியது கொரோனா உயிரிழப்பு

Published On 2021-10-08 22:51 GMT   |   Update On 2021-10-08 22:51 GMT
பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக அதிகரித்துள்ளது.
பிரேசிலியா:

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது.

கொரோனாவின் இரண்டு அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
 
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது.

Tags:    

Similar News