ஆன்மிகம்
திருமலையில் வராக ஜெயந்தி

திருமலையில் வராக ஜெயந்தி

Published On 2021-09-11 03:08 GMT   |   Update On 2021-09-11 03:08 GMT
திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் வராக மூர்த்திக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் ஸ்நாபன திருமஞ்சனமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது.

திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் நேற்று வராக ஜெயந்தி விழா நடந்தது. அதையொட்டி காலை கலச ஸ்தாபனம், கலச பூஜை, உற்சவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் ஸ்நாபன திருமஞ்சனமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது.

விழாவில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, கோவில் அதிகாரி பாலசேஷாத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News