செய்திகள்
சு.ரவி எம்எல்ஏ ஆய்வு செய்த காட்சி.

நெமிலி அருகே கல்லாறு குறுக்கே பாலம் கட்டும் பணி- சு.ரவி எம்எல்ஏ ஆய்வு

Published On 2021-01-10 12:31 GMT   |   Update On 2021-01-10 12:31 GMT
கல்லாறு குறுக்கே ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் ஆரம்ப கட்ட பணிக்கான மண் பரிசோதனை நடைபெற்று வரும் இடத்தினை சு.ரவி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
நெமிலி:

நெமிலி அருகே சம்பத்ராயன்பேட்டை - இலுப்பை தண்டலம் கல்லாறு குறுக்கே ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் ஆரம்ப கட்ட பணிக்கான மண் பரிசோதனை நடைபெற்று வரும் இடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி பார்வையிட்டார். மேலும் பணியின் தன்மை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News