செய்திகள்
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டிருந்த காட்சி.

குடியாத்தத்தில் ஊழியருக்கு கொரோனா - வங்கி மூடப்பட்டது

Published On 2021-04-22 17:50 GMT   |   Update On 2021-04-22 17:50 GMT
குடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கி மூடப்பட்டது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நேற்று வேலூர் மாவட்டத்தில் 297 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டு, வங்கியில் கொரோனா தொற்று உள்ளது என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதியத்திற்கு மேல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனால் நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டது எனவும், நாளை (இன்று) முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கம்போல் வங்கி இயங்கும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News