செய்திகள்
திருப்பதி

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ராமர் சிலை தயாராகிறது

Published On 2021-01-10 07:10 GMT   |   Update On 2021-01-10 07:10 GMT
பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ராமதீர்த்தத்தில் உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ராமர் சிலை தயாராகிறது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரசித்தி பெற்ற ராம தீர்த்தம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6 அடி உயரத்தில் ராமர், லட்சுமணர், சீதை கற்சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு கோவிலில் இருந்த 3 சிலைகளையும் மர்ம கும்பல் திருடி சென்று சாமி சிலைகளின் தலைகளை துண்டித்து அருகே உள்ள கோனேறு ஆற்றில் வீசி சென்றனர். காலை வழக்கம் போல் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தனர்.

ஆனால் கருவறையில் சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் விஜயவாடா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மோப்ப நாய்களுடன் சாமி சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஆற்றில் சாமி சிலைகள் வீசப்பட்டது தெரியவந்தது.

தற்போது கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். கோவில் நிர்வாகிகள், அந்த பகுதி பொதுமக்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்து ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை வடிவமைத்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.

தேவஸ்தானம் சார்பில் உடனடியாக சிலைகளை வடிவமைத்து தரப்படும் என உறுதியளித்தனர்.
Tags:    

Similar News