ஆன்மிகம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-12 06:47 GMT   |   Update On 2021-03-12 06:47 GMT
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிமாதத்தில் மயானக் கொள்ளை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான மயானக்கொள்ளை வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பகல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக அதிகாலை தவளக்குப்பம் அருகே சுண்ணாம்பாற்றில் புனித நீர் திரட்டு, கரகம் புறப்பாடு நடந்தது.

பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கரகம் வீதியுலா சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முதல் மயானக் கொள்ளைக்கு சென்றது. விழா நாட்களில் தினமும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 18-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய விழாவான மயானக் கொள்ளை தேரோட்டம் வரும் 19-ந்தேதி மாலை நடக்கிறது. 20-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. கோவில் அறங்காவல் குழு தலைவர் எழில்ராஜா, துணைத்தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி, கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News