ஆன்மிகம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா பக்தர்கள் இன்றி நடந்த காட்சி.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-07-28 05:04 GMT   |   Update On 2020-07-28 05:04 GMT
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலையில் பால் அன்னதர்மம், மதியம் உச்சிப்படிப்பு நடந்தது. தொடர்ந்து கொடிமரம், தேருக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.

விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின், தங்ககிருஷ்ணன், பணிவிடையாளர் பச்சைமால் மற்றும் நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து பங்கேற்றனர்.
Tags:    

Similar News