ஆன்மிகம்
அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

Published On 2020-11-06 03:46 GMT   |   Update On 2020-11-06 03:46 GMT
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் பூசிய கொடிமர திருவிழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க இந்த கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்து இருப்பிடம் சேர்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வழிகாட்டுதல் படி இந்த விழா நடந்தது.

அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர். முன்னதாக சந்தனகூடு விழாவினையொட்டி பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News