விளையாட்டு
சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை - சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

Published On 2021-12-05 17:55 GMT   |   Update On 2021-12-05 17:55 GMT
இந்தியா, பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தக்கவைத்தது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதின.

இதில் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி இரண்டாவது முறையாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
Tags:    

Similar News