உள்ளூர் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு திரண்டவர்கள்.

கடையம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-05-07 09:54 GMT   |   Update On 2022-05-07 09:54 GMT
கடையம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கோவிந்தப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பட்டா கேட்டு திரண்டனர்.
கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கோவிந்தப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் சுமார் 35 வருடங்களுக்கும் மேல் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வரும் இந்த பொதுமக்கள், பட்டா வழங்க வேண்டி பஞ்சாயத்துத் தலைவர் டி.கே பாண்டியனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.  

இதையடுத்து கோவிந்தபேரி பஞ்சாயத்து தலைவர் டி .கே பாண்டியன் மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று அந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாகதென்காசி தாசில்தாரிடம் பேசி பட்டா வழங்க கோரிக்கை விடுத்தார்.  

மேலும் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இது குறித்து டி.கே.பாண்டியன் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டரிடம் இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ் .ஆர். ராமச்சந்திரனிடமும் பேசி விரைவில் இந்த பகுதி மக்களுக்கு பட்டா வாங்கி கொடுப்பேன் என்று உறுதி கூறினார்.
Tags:    

Similar News