செய்திகள்

புலந்த்‌ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது

Published On 2016-08-08 18:31 GMT   |   Update On 2016-08-08 18:31 GMT
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷரில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது.

கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News