தொழில்நுட்பம்
ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு

ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் விர்ச்சுவல் நிகழ்வு தேதி அறிவிப்பு

Published On 2020-05-06 05:09 GMT   |   Update On 2020-05-06 05:09 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 டெவலப்பர்கள் விர்ச்சுவல் நிகழ்வுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நேரலை ஸ்டிரீம் செய்யப்படுகிறது. இது ஆப்பிள் டெவலப்பர் ஆப் மற்றும் ஆப்பிள் டெவலப்பர் வலைதளத்தில் ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் மற்றும் ஒஎஸ் எக்ஸ் எதிர்கால வெர்ஷனை அறிமுகம் செய்யும். இந்த ஆண்டு ஐஒஎஸ் 14, மேக் ஒஎஸ் 10.16, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்ட அப்டேட்கள் வழங்கப்படுகிறது. 

புதிய வாட்ச்ஒஎஸ் 7 ஸ்லீப் டிராக்கிங், டக்கிமீட்டர் மற்றும் வாட்ச் ஃபேஸ்களை ஷேர் செய்வது போன்று பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுதவிர ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இதில் மாணவர்கள் தங்களது சொந்த ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்க வேண்டும். 

இந்த போட்டியில் உலகம் முழுக்க இருக்கும் மாணவ டெவலப்பர்கள் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டில் மூன்று நிமிடங்களுக்குள் ஓடும் சீன் ஒன்றை உருவாக்கி அனுப்ப வேண்டும். இதில் வெற்றி பெறுவோருக்கு 2020 டெவலப்பர்கள் நிகழ்வுக்கான ஜாக்கெட் மற்றும் பின் செட் வழங்கப்பம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News