உள்ளூர் செய்திகள்
வியாபாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்த காட்சி.

திருப்பத்தூர் வியாபாரிகள் கூட்டமைப்பு கூட்டம்

Published On 2022-04-17 09:22 GMT   |   Update On 2022-04-17 09:22 GMT
திருப்பத்தூர் வியாபாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்:

தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோயில் அருகே ஆசிரியர் சங்கரலிங்கம் இல்லத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாநில பொருளாளர் நாகம்மாள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர். 

திருப்பத்தூர் மாவட்ட தலைவராக லட்சுமணன், செயலாளராக பாஸ்கரன், பொருளாளராக ஜமாலுதீன், உள்ளிட்ட, 25 மேற்பட்ட பொறுப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில் மாநில தகவல் தொழில்நுட்பம் அமைப்பாளர் வினோத், புதிய நிர்வாகிகள் கோவிந்தராஜ், கௌதம், சம்பத்குமார், விஜயகுமார், சுதாகர், லோகநாதன், சுரேஷ்குமார், மகேந்திரன், தியாகராஜன், கீர்த்திவாசன் பல பேசினார்கள் நிகழ்ச்சியில் 100, மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News