செய்திகள்
ஆட்டோக்கள்

முழு ஊரடங்கு நீட்டிப்பு- பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அனுமதிக்கப்படும் பணிகள்

Published On 2021-06-11 14:12 GMT   |   Update On 2021-06-11 15:50 GMT
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை, 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்த் தொற்று பரவல் கட்டுக்கள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், கூடுதலாக சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதி விவரம் பின்வருமாறு:-

வேலைகள், பணிகள்

தளர்வுகள்

எலக்ட்ரீசியன்கள்

காலை 9- மாலை 5 (-பதிவு)

பிளம்பர்கள்

காலை 9-மாலை 5 (-பதிவு)

கணினிபழுதுநீக்குபவர்

காலை 9- மாலை 5 (-பதிவு)

இயந்திரங்கள்பழுதுநீக்குபவர்

காலை 9- மாலை 5 (-பதிவு)

டாக்சிகள், ஆட்டோக்கள்

-பதிவுடன்அனுமதி

டாக்சிகள்

மூன்றுபயணிகள்

ஆட்டோக்கள்

இரண்டுபயணிகள்

வேளாண்உபகரணங்கள்,
பம்புசெட்பழுதுநீக்கும்கடைகள்

காலை 9 மணிமுதல் 2 மணி

கண்கண்ணாடிவிற்பனைகடை

காலை 9 மணிமுதல் 2 மணி

மண்பாண்டம்தயாரிப்பு, விற்பனை

காலை 9 மணிமுதல் 5 மணி

ஏற்றுமதிநிறுவனங்கள்

25 % பணியாளர்கள்

ஏற்றுமதிநிறுவனங்களுக்கு
இடுபொருள்தயாரித்துவழங்கும்
நிறுவனங்கள்

25 % பணியாளர்கள்

கைவினைப்பொருட்கள்
தயாரித்தல்மற்றும்விற்பனை

காலை 9 மணிமுதல் 5 மணி

Tags:    

Similar News