ஆட்டோமொபைல்
டொயோட்டா கார்

விற்பனையில் 36 சதவீத வளர்ச்சி பெற்ற டொயோட்டா இந்தியா

Published On 2021-03-02 08:16 GMT   |   Update On 2021-03-02 08:16 GMT
டொயோட்டா நிறுவனம் இந்திய விற்பனையில் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகனங்கள் விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டது. அதன்படி டொயோட்டா நிறுவன வாகனங்கள் விற்பனை 2020 பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது 35.96 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. 

கடந்த மாதம் டொயோட்டா நிறுவனம் 14,075 யூனிட்களை விற்பனை செய்தது. 2020 பிப்ரவரி மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 10,352 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. மாடல் வாரியாக விற்பனை விவரங்களை டொயோட்டா வெளியிடவில்லை. 



எனினும், டொயோட்டா அறிமுகம் செய்த புது மாடல்களே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் மேம்பட்ட இன்னோவா க்ரிஸ்டா மாடலை அறிமுகம் செய்தது. பின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் லெஜன்டர் போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இவைதவிர டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் கிளான்சா போன்ற மாடல்களும் உள்நாட்டு விற்பனையை அதிகப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனவரி 2021 மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 11,126 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி மாதாந்திர அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் 26.51 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
Tags:    

Similar News