உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரி கடற்கரையில் வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து

Published On 2022-04-17 08:58 GMT   |   Update On 2022-04-17 08:58 GMT
கன்னியாகுமரி கடற்கரையில் சங்கில் பெயர் எழுதி கொடுக்கும் கடை நடத்தி வரும் வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 48). இவர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் சங்கில் பெயர் எழுதி கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் அந்த பகுதியில் உள்ள நடைபாதையில் தரையில் வைத்து மாங்காய் வியாபாரம் செய்து வந்த கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த தகராறு அவர்கள் இருவருக்கும் இடையே மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கேரள வாலிபர் தனது கையில் வைத்திருந்த  கத்தியால் ஸ்டீபனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வியாபாரி ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News