செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2020-09-28 18:31 GMT   |   Update On 2020-09-28 18:31 GMT
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நலம் பெற வேண்டி பல்வேறு கோவில்களில் தேமுதிகவினரால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் விஜயகாந்த் விரைவாக நலம்பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  மணப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை குறித்து  அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கேட்டறிந்தார்.

பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News