உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திருச்சியில் ஜெயில் கைதிகள் சாகுபடி செய்த கரும்பு பொங்கலுக்கு அறுவடை

Published On 2022-01-01 10:26 GMT   |   Update On 2022-01-01 10:26 GMT
சிறை வளாகத்தில் இயற்கை உரங்கனை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு மாநகர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

திருச்சி:

திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு திறந்தவெளி ஜெயில் தோட்டத்தில் வேளாண் பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.

நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தண்டனை கைதிகள் மூலம் மீன் பண்ணை, காய்கறி சாகுபடி, கரும்பு போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு தொழிற் பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

சிறை வளாகத்தில் இயற்கை உரங்கனை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு மாநகர மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைக்கிறது.

சென்ற ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. இதனை இந்த பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்ய ஜெயில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பயிரிடப்பட்ட கரும்பு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்காத காரணத்தால் வெளிச்சந்தையில் விற்கப்பட்டது. திருச்சி ஜெயில் அங்காடி மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறை வளாகத்தில் மலிவு விலையில் விற்றனர். திருச்சி ஜெயில் அங்காடியில் சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் வாங்கி பயனடைந்தனர்.

நடப்பு ஆண்டிலும் கூட்டுறவுத்துறை மூலம் விற்க ஜெயில் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் நியாயமான விலை கிடைக்காவிட்டால் சென்ற அண்டை போலவே திறந்த வெளி ஜெயிலில் வைத்து சில்லறை விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News