தொழில்நுட்பம்
போக்கோ

இணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன்

Published On 2020-05-22 06:23 GMT   |   Update On 2020-05-22 06:23 GMT
போக்கோ பிராண்டின் புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



போக்கோ பிராண்டின் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் போக்கோ எம்2 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் இது கிராம் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் வைபை அலையன்ஸ் வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் MIUI 11 யுசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



இதன் விவரங்கள் ரெட்மி நோட் 9 மாடல்களுடன் ஒற்றுபோகிறது. அதன்படி சியோமி ஸ்மார்ட்போன் அம்சங்கள் அதிகம் நிறைந்த முதல் போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. சமீபத்திய போக்கோ சாதனங்கள் ரெட்மியின் கே சீரிஸ் மாடல்களின் ரீபிராண்டு செய்யப்பட்ட மாடல்களாக இருந்தன.

வைபை அலையன்ஸ் வலைதள விவரங்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என்றும் டூயல் பேண்ட் வைபை கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. இத்துடன் ரெட்மி நோட் 9 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இரு சாதனங்களும் சியோமி இந்தியா வலைதளத்தில் காணப்பட்டது.
Tags:    

Similar News