செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-01 03:43 GMT   |   Update On 2021-05-01 03:43 GMT
புதுக்கோட்டையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 744 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

அரிமளம் ஒன்றியத்தில் 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராயவரம் கிராமத்தை சேர்ந்த 80 வயது பெண், மேலதேமுத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், துறையூர் கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண், அரிமளம் பேரூராட்சி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 25 வயது பெண், அரிமளம் கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 74 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 70 வயது பெண் ஆகிய 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News