ஆட்டோமொபைல்
பெனலி இம்பீரியல் 400

2021 பெனலி இம்பீரியல் 400 இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-08 05:57 GMT   |   Update On 2021-02-08 05:57 GMT
பெனலி நிறுவனத்தின் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


பெனலி நிறுவனம் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 பெனலி இம்பீரியல் 400 விலை ரூ. 1.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான இம்பீரியல் மாடலின் பிஎஸ்6 வெர்ஷன் ஆகும். 

புதிய இம்பீரியல் 400 அந்நிறுவனத்தின் இந்திய விற்பனையை ஊக்குவிக்கும் என பெனலி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதன் விலை விற்பனையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. 2021 பெனலி இம்பீரியல் 400 மாடலுடன் இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.



இத்துடன் 24x7 Roadside Assistance வசதியும் வழங்குகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ரெட்ரோ-டிசைன் கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டியர்-டிராப் பியூவல் டேன்க், ஸ்போக் வீல் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

2021 பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News