உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் இன்று தரிசனம் செய்த பக்தர்கள்.

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி -நெல்லை கோவில்களில் திரண்ட பக்தர்கள்

Published On 2022-01-28 09:29 GMT   |   Update On 2022-01-28 09:29 GMT
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து நெல்லையில் இன்று கோவில்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 3 வாரங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர் களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. இதனால் அவர் கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து சென்றனர்.

இந்நிலையில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு தளர்த்தப் பட்ட நிலையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவிலில் வழக்கம் போல் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் சந்திப்பு சாலைக் குமார் சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், பாளை சுப்பிரமணிய சுவாமி கோவில், ராமசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் திரண்டனர்.

இதேபோல் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தடை காரணமாக வெள்ளிக்கிழமைகளில்  இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.

இன்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம், டவுன், பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Tags:    

Similar News