செய்திகள்
மழை

மழைகாலங்களுக்கான வழிமுறைகள் உடுமலை மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்

Published On 2021-09-10 05:57 GMT   |   Update On 2021-09-10 05:57 GMT
தண்ணீர் தேங்கும் இடத்தில் நிற்கவும் நடக்கவும் கூடாது.
உடுமலை:

மழைக்காலத்தில் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதுகுறித்து உடுமலை மின்பகிர்மான வட்ட அதிகாரிகள் கூறுகையில்:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்கவேண்டும். இடி மின்னலின் போது அருகே உள்ள கட்டிடம் அல்லது வாகனங்களுக்குள் சென்றுவிட வேண்டும்.

குடிசை வீடு மரங்களின் கீழ் நிற்க கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் கதவு அருகேயும் சாய்ந்த மின் கம்பங்கள் அருகேயும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் டிவி கேபிள் இணைப்புகளை துண்டிப்பது மற்றும் மிக்சி, கிரைண்டர், மின் சாதனங்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மழை பெய்யும் போது ட்ரான்ஸ்பார்மர் மின் கம்பம் அருகே செல்லக்கூடாது. மின்சாதனங்களில் மின் அதிர்வு ஏற்பட்டால் மெயின் ஸ்விட்ச்சை ஆப் செய்திட வேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் நிற்கவும் நடக்கவும் கூடாது.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது. ஈரமான கையோடு மின்சாதனங்களை தொடக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளனர்.
Tags:    

Similar News