செய்திகள்
போதமலைக்கு தலைச்சுமையாக செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள்

சட்டசபை தேர்தலுக்காக போதமலைக்கு தலைச்சுமையாக செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள்

Published On 2021-02-23 11:06 GMT   |   Update On 2021-02-23 11:06 GMT
போதமலைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், ஒவ்வொரு தேர்தலின்போதும் பொதுமக்களின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட போதமலையில் கீழுர், மேலூர் மற்றும் கெடமலை என 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி செய்துதரக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சைக்கு கூட கர்ப்பிணிகள், முதியவர்களை அப்பகுதியினர் தலைச்சுமையாக தான் கொண்டு செல்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும், பொதுமக்களின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது வரை போதமலைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், வருகிற சட்டசபை தேர்தலின்போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக கொண்டு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.

எனவே அடுத்த தேர்தலுக்குள்ளாவது சாலை வசதி கிடைக்க அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News