வழிபாடு
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2022-01-19 07:47 GMT   |   Update On 2022-01-19 07:47 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பக்தர்கள் இன்றி நிறைபுத்தரிசி பூஜை நடந்தது. கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயலில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், அதிகாலை 5.30 மணிக்கு நெற்கதிர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாணுமாலயசாமி சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

வழக்கமாக சிறப்பு பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படும். ஆனால், நேற்று கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் இன்றி நிறைபுத்தரிசி பூஜை நடந்தது. கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தைப்பூச விழாவையொட்டி நேற்று காலை மற்றும் மாலை வேளையில் சாமி, அம்பாள், பெருமாள் வாகன பவனி 4 ரத வீதியில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News