ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ கார்

கார் மாடல்கள் விலையை மாற்றியமைத்த பிஎம்டபிள்யூ

Published On 2021-04-29 10:53 GMT   |   Update On 2021-04-29 10:53 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது 3 சீரிஸ், 2 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 உள்ளிட்ட மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்லைன் மற்றும் 220ஐ எம் ஸ்போர்ட் குயிஸ் விலை முறையே ரூ. 80 ஆயிரம் மற்றும் ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 220ஐ ஸ்போர்ட் ட்ரிம் விலை மாற்றப்படவில்லை.



3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் பெட்ரோல் வேரியண்ட் 330ஐ ஸ்போர்ட் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் மாடல்கள் முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 320டி லக்சரி எடிஷன் விலை ரூ. 60 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ் டிரைவ் 20ஐ ஸ்போர்ட்எக்ஸ் மற்றும் எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் மாடல்கள் விலை முறையே ரூ. 1,30,000 மற்றும் ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலான எஸ்டிரைவ்20டி எக்ஸ்லைன் விலை ரூ. 1,10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எக்ஸ்3 சீரிஸ் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 எஸ்யுவி விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 மாடல்கள் விலை முறையே ரூ. 60 ஆயிரம் மற்றும் ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News