ஆன்மிகம்
புனித சந்தியாகப்பர்

புனித சந்தியாகப்பர் தேவாலயம்

Published On 2021-07-19 03:00 GMT   |   Update On 2021-07-19 03:00 GMT
புனித சந்தியாகப்பர் தேவாலயம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூக்கையூரில் உள்ள பழமையான ஒரு கிறித்துவ ஆலயமாகும்.
புனித சந்தியாகப்பர் தேவாலயம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூக்கையூரில் உள்ள பழமையான ஒரு கிறித்துவ ஆலயமாகும். இந்த ஆலயமானது சிவகங்கை மறைமாவட்டத்துக்கு உட்பட்டது.

வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு முதல் வேம்பார் வரை வாழ்ந்து வந்த பரதவ மக்கள் கீழக்கரைவரை மீன்பிடித்தல், முத்துக் குளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இப்பகுதியில் இவர்களுக்கும் மூர் இன முசுலீம்களுக்கும் தொழில் பேட்டி இருந்துவந்த நிலையில் இது மோதலாக உருவெடுத்தது. இதனால் பரதவ மக்கள் கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர்களிடம் ஆயுத உதவியைக் கேட்டனர். அதற்கு அவர்கள் தாங்கள் நேரடியாக உதவ இயலாது என்றும், வேண்டுமானால் கிறித்தவர்களாக மாறினால் உதவத் தயார் என்றனர். இதையடுத்து 1529 ஆம் ஆண்டு 40,000 பரதவர்கள் பெர்ணாண்டோ கிறித்தவர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மக்களில் ஒரு பகுதியினர் மூக்கையூரில் வாழ்ந்து வந்த நிலையில், இந்த மக்களுக்காக 1715இல் புனித சந்தியாகப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.

தேவாலயம்

இந்த தேவாலயமானது முதலில் ஒரு ஓட்டுக் கட்டிடத்தில் செயல்பட்டுவந்தது. பின்னர் 1715 இல் போர்த்துகிசிய, உரோமானியக் கட்டிடக் கலையில் புதியதாக கட்டப்பட்டது. பழமையான இந்ந தேவாலயமானது வலு குன்றியுள்ளதாக கருதப்பட்டுள்ளதால் பாதுகாப்புக் கருதி பயன்பாடு இன்றி உள்ளது.

Tags:    

Similar News