தொழில்நுட்பம்
நோக்கியா 3.4

இணையத்தில் லீக் ஆன நோக்கியா 3.4 விவரங்கள்

Published On 2020-09-10 04:00 GMT   |   Update On 2020-09-10 04:00 GMT
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் ரக நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2020 ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இது நடைபெறவில்லை.

புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.



அந்த வகையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் தெளிவாக காட்சியளிக்கும் ரென்டர்கள் இடம்பெற்றுள்ளன. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ கேமரா பம்ப் மற்றும் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் பன்ச்-ஹோல் கட்அவுட் வழங்கப்படுகிறது.

இத்துடன் பக்கவாட்டில் பட்டன்கள், ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் வழக்கமான பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஒருபுறமும், மற்றொரு பக்கம் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்களின் படி நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஒன் திட்டம் சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News