உள்ளூர் செய்திகள்
உத்தமபாளையத்தில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். இதில

தேனியில் இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்

Published On 2022-04-17 08:23 GMT   |   Update On 2022-04-17 08:23 GMT
தேனியில் இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேனி:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 340 இலவச மின் இணைப்புகளும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 398 மின் இணைப்புகளும், போடி சட்டமன்ற தொகுதியில் 312 மின் இணைப்புகளும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 678 மின் இணைப்புகள் என மொத்தம் ஆயிரத்து 1,728 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் உத்தமபாளையத்தில் நடைபெற்ற விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று விவசாயிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

அதுபோல தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மின்வாரிய தேனி வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகா மற்றும் தேனி செயற்பொறியாளர் பிரகலாதன் ஆகியோர் விவசாயிகளுக்கு மின் இணைப்பு பெற்றமைக்கான சான்றிதழ்களை வழங்கினார்கள்.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் குள்ளப்புரம் முருகன், எண்டப்புளி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News