லைஃப்ஸ்டைல்
முகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்

முகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்

Published On 2021-04-12 08:26 GMT   |   Update On 2021-04-12 08:26 GMT
மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஆரஞ்சு:

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

பருப்புகள்:

பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.

பச்சை காய்கறிகள்:

கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.

பீன்ஸ்:

துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.

உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:

இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
 
இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.
 
காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.  மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News