இந்தியா
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்முகாஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மேலும் ஒரு பயங்கரவாதி கைது

Published On 2022-01-22 19:35 GMT   |   Update On 2022-01-22 19:35 GMT
பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஷோபியான்:

ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் கில்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.  இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் உள்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 

அவர்களின் உடல்கள்  என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அவர்கள் சமீர் அகமது, சோபியான் மற்றும் ரயீஸ் அகமது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியின் செயல்பாடுகள் பற்றி அறிந்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில், அவந்திபோராவின் ரென்ஜிபோரா என்ற பகுதியை சேர்ந்த உமர் பரூக் பட் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்து செய்தனர்.  அவரிடம் இருந்து, வெடிபொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டன..அவர் பயங்கரவாதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Tags:    

Similar News