ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ20

2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-10-22 10:11 GMT   |   Update On 2020-10-22 10:11 GMT
ஹூண்டாயின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 மாடலை இந்திய சந்தையில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் புதிய ஹூண்டாய் கார் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறை ஐ20 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக 2020 ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. 



2020 ஹூண்டாய் ஐ20 மாடல் முற்றுலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. அதன்படி 2020 ஐ20 மாடல் புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. 

இத்துடன் புது டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் மேலும் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

இந்த என்ஜின்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி போன்ற டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News