சமையல்
ஆரஞ்சு தோல் டீ

ஆரஞ்சு சாப்பிட்டு தோலை தூக்கிப் போடாதீங்க... அதுல சூப்பரா டீ போடலாம் வாங்க...

Published On 2022-03-26 05:21 GMT   |   Update On 2022-03-26 05:21 GMT
ஆரஞ்சு தோலை பயன்படுத்தி தயாரிக்கும் இந்த டீயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றன. இதில் நிறைய பெக்டின் காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்

அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள். இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.

இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.
Tags:    

Similar News