செய்திகள்
அதிமுக

கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியது

Published On 2020-01-11 12:06 GMT   |   Update On 2020-01-11 12:06 GMT
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் 12 ஊராட்சி ஒன்றியங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 21 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணிமேகலை போட்டியின்றி காரமடை ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளார். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த நர்மதா போட்டியின்றி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மதுமதி போட்டியின்றி தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த விஜயராணி என்பவர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளார். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாகராணி என்பவர் கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 8-வது வார்டு கவுன்சிலர் மாதப்பூர் பாலு என்கிற பாலசுந்தரம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தமிழரசி என்பவர் போட்டியிட்டார். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுந்தரம் 8 வாக்குகள் பெற்று சூலூர் ஒன்றிய தலைவராக வெற்றி பெற்றார்.

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த பழனிச்சாமி அன்னூர் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி ஆனைமலை ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கவிதா ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 6 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த உதயகுமாரி என்பவர் மதுக்கரை ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளார். இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரத்தினம் என்பவர் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் மகாலிங்கம் என்பவர் போட்டியிட்டார். இதில் 7 வாக்குகள் பெற்று அ.தி.மு.க.வை சேர்ந்த ரத்தினம் சுல்தான்பேட்டை ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் லட்சுமி என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சித்ரா போட்டியிட்டார். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. கவுன்சிலர் மோகனா என்பவர் தாமதமாக வந்ததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News