உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்களை படத்தில் காணலாம்,

டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-06 08:59 GMT   |   Update On 2022-05-06 08:59 GMT
டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:


தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு (சிஐடியு) சார்பில் கரூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் கிடிங்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் பிச்சை முத்து, சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்ம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியாக ஏற்று கூலியாக மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வழங்க வேண்டும். ஏற்றுக் கூலியை  மாதக்கணக்கில் பாக்கி வைக்காமல் தினசரி வழங்க வேண்டும்.

மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்க சென்னை அம்பத்தூர் கிடங்குகளில் உள்ளது போல் அனைத்து கிடங்குகளிலும் ட்ராலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News